தமிழக இளம் டேபில் டென்னிஸ் வீரா் சாலை விபத்தில் மரணம்

0
26

தமிழகத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரரும் 18 வயதே ஆன விஸ்வா தீனதயாளன், டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மேகாலயா சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வா தீனதயாளன்  மாநில மற்றும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பங்கேற்று பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பி.காம் படித்த விஸ்வா தீனதயாளன் ஷில்லாங்கில்  இன்று தொடங்கும்  83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கௌஹாத்தியில் இருந்து சக போட்டியாளர்களுடன் காரில் சென்றுள்ளார்.

தமிழக இளம் டேபில் டென்னிஸ் வீரா் சாலை விபத்தில் மரணம்
தமிழக இளம் டேபில் டென்னிஸ் வீரா் விஸ்வா தீனதயாளன், சாலை விபத்தில் மரணம்

ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி வந்து கார் மீது மோதியது.

இதில், கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் நாளை காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வளர்ந்து வரும் இளம் சாதனையாளரான விஸ்வா தீனதயாளன் மரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரதிர்ச்சியாக உள்ளது. அவரது மரணம் மிகுந்த பேரதிர்ச்சியாகவும் மனதை பாதிப்பதாகவும் உள்ளது. அவரது குடும்பத்தினர், நன்பர்கள் மற்றும் சக வீரர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here