கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கண்ணாடி இழைப் பாலம் அமைக்க தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழநாட்டின் சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அதிகாலை கடல் அலைகளுக்கு நடுவே அதிகாலையில் உதிக்கும் சூரியனை காண சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் சென்று ரசிப்பது வழக்கம். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலத்திலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக உள்ளது.
அப்படி வருபவர்கள் கடலுக்கு நடுவே இருக்கும் விவேகாணந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகே 133 அடி உயரத்தில் காணப்படும் திருவள்ளுவர் சிலையையும் அருகே கண்டு ரசித்து வருவதும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இந்த நிலையில் விவேகாணந்தர் மண்டம் செல்லவும் படகையே சுற்றுலாத் துறை நம்பியுள்ளது. அதுபோலவே திருவள்ளுவர் சிலையை காணவும் விவேகாணந்தர் சிலையிலிருந்து மற்றுமொரு படகு மூலமே செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.

இப்படி இருக்கையில் விவேகாணந்தர் சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலையை காண செல்லும் போது அலையின் தாக்கம் மற்றும் கடலின் காற்று அதிகமாக இருந்தாலோ சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை அதனால் அடிக்கடி விவேகானந்தர் மண்டபம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலுக்கு நடுவே இரண்டு இடங்களையும் இணைக்கும் பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை அமலாக்க திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக தமிழ்நாடு கடலோர மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது, அந்த திட்டத்திற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கடலில் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கண்ணாடியில் பாலம் ரூ37 கோடி செலவில் அமைய உள்ளது. சுற்றுலாத் துறையினர் இந்த பாலத்தில் நடந்து செல்லும் போது கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களையும் கடல் அலைகளையும் ரசித்தப்படியே செல்ல முடியும் இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளும் இன்பமான பயணத்தை அனுபவிக்கலாம். இது போன்ற கண்ணாடி இழையால் அமைக்கப்படும் பாலம் வெளிநாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: நடிகர் கூறிய புகாருக்கு பதிலளித்த சென்னை விமான நிலைய அதிகாரிகள்
இந்த திட்டம் அமைந்தால் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட கடலுக்கு நடுவே அமைக்கப்பட்ட கண்ணாடி பாலம் இதுவாக இருக்கும்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.