ஹரீஷ் கல்யாண்: நடிகர் ஹரீஷ் கல்யாண் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். அதன் பிறகு அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பொறியாளன், வில் அம்பு, கசடதபற, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அவர் டீசல் சசி இயக்கும் நூறு கோடி வானவில் படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே தனது டிவிட்டர் பக்கத்தில் தான் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணை அறிமுகம் செய்திருந்தார். அவர் பெங்களூரை சேர்ந்த நர்மதா உதயகுமார் ஆவார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமான நிலையில் இன்று இவர்களது திருமணம் நடைபெறுகிறது.
இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸில் இவர்களது திருமணம் நடைபெற்றது. நாளை சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. இது குறித்து ஹரீஷ் கல்யாண் கூறும்போது, ‘இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். காதல் திருமணம் கிடையாது. படப்பிடிப்புகள் இருப்பதால் திருமணம் முடிந்ததும் தேனிலவு செல்லவில்லை’ என்றார். இன்று இவர்களது திருமணம் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.