திருப்பதியில் 2 நாள்கள் இலவச தரிசன டிக்கெட்டுக்கள் ரத்து

0
12

திருமலை திருப்பதி: திருமலை திருப்பதியில் இன்றும் நாளையும் இலவச தரிசன டிக்கெட்டுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட்டுக்கள் டிசம்பர் 31ம்(இன்று) தேதி, அடுத்தாணடு ஜனவரி 1ம்(நாளை) தேதி வழங்கப்படுவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டிக்கெட்டுக்கள் வீதம் 10 நாட்களுக்கு மொத்தம் 4.50 லட்சம் டிக்கெட்டுக்கள் வழங்கப்படும்.

today and tomorrow free tickets cancelled in tirumal tirupati

இதற்காக வரும் 1ம் தேதி மதியம் 2 மணி முதல் திருப்பதியில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் டிக்கெட்டுக்கள் வழங்கப்படுகிறது. மேலும் 31ம் தேதி இன்று முதல் 11ம் தேதி வரை ஆஃப் லைனில் திருப்பதி மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் விஜபி டிக்கெட் வழங்குவதும் ரத்து செய்யப்படுகிறது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here