தனுஷ்: லீடர், ஃபிடா, லவ் ஸ்டோரி உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா. இவர் இப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் படத்தை இயக்குவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று அந்த படத்திற்கான பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
தற்போது தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள பைலிங்குவல் படமான ‘வாத்தி’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் ரிலீஸ் தேதி தள்ளிப் போகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் வாத்தி, சேகர் கம்முலா படங்களை தொடரந்து தனுஷ் மூன்றாவதாக தெலுங்கு இய்க்குனர் வேணு உடுகுலா படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிகர் தனுஷின் புது பட பூஜை ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.