அர்ஜென்டீனாவை வீழ்த்தியதன் எதிரொலி இன்று சவூதிக்கு பொது விடுமுறை. கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஓன்றான அர்ஜென்டினாவை சவூதி அரேபியா வீழ்த்தி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் தான் என்று நாம் தான் நினைத்திருக்கிறோம். ஆனால், பல ஆயிர கோடிக்கனக்கான ரசிகர்களை கொண்டது கால்பந்து விளையாட்டு. உலகம் முழுவதும் உள்ள சுமார் 200 நாடுகள் இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கு பெறுகிறது. பல பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகின்றது.
தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51வது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா அணி நேற்று நடந்த கால்பந்து போட்டியில் வலுவான வெற்றியை பெற்றது. 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனாவை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இதனால் அரபு நாடுகள் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 10வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். போட்டியின் 27 வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் மார்டினிஸ் கோல் அடிக்க, அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டது. இது போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா சாதனை
இதனைத் தொடர்ந்து 48வது நிமிடத்தில் சவுதி வீரர் சாலே அல் செரியும், 53வது நிமிடத்தில் சவுதி வீரர் சலீமும் கோல் அடிக்க, இதில் சவுதி அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சவுதி அரேபியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் அலோவைஸ் தான். அதனால் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அரசு மற்றும் அரசு சார நிறுவனங்கள் என அனைத்திற்கும் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.