அருட்பெரும் ஜோதியான வள்ளாரின் 200வது பிறந்த நாள் இன்று

0
6

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிபெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லாம் கைகூடும் என் ஆணை அம்பலத்தே என எங்கும் கருணை ஓன்றே பெரும் செல்வம் என்று வாழ்ந்த வள்ளல் பெருமானின் 200 வது பிறந்த நாளை நினைவு கூறுவோம்.

மனிதனுக்கு பெரும் பிணி என்னவென்றால் பசி பிணிதான் என்பதை உணர்ந்து பசியுடன் வருபவருக்கு உணவு அளித்து வாழ்ந்து வந்தவர் வள்ளலார். அன்று முதல் இன்று வரை அணையா விளக்காக அணையா அடுப்பு அங்கு உணவு வேண்டி வருபவருக்கு உணவை அளிப்பதை தவறுவதில்லை. ”பசியாற்ற உணவளிப்பதே உயர்ந்த அறம்” என்ற கொள்கையை நமக்கு அளித்து அன்னதானம் அளிக்கும் தருமச்சாலையை அளித்த வள்ளலாரின் பிறந்த நாள் இன்று.

வள்ளலார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் பிறந்தவர். இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவாராம். ”ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என வேண்டியவர்.

அருட்பெரும் ஜோதியான வள்ளாரின் 200வது பிறந்த நாள் இன்று

23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். அறிவுநெறி விளங்க சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.

வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்:

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
குருவை வணங்கக் கூசி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
பிறரை இகழ்ந்து பேசாதே..
பிற ௨யிர்களிடமும் ௮ன்பு கொள்க.

என உயர்ந்த அறநெறிகளை கொள்கையாக பின்பற்றி வாழ்ந்து வந்தவர் வள்ளலார் அவரின் 200 வது பிறந்தநாளில் அவரின் கொள்கைகளை தெரிந்து கொண்டு அவர் வழியில் வாழ்வோம்.

இது போன்ற தகவல்கள் மற்றும் ஜோதிடம், ஆன்மீகம், உடல்நலம், கல்வி, நகைச்சுவை, செய்திகள் என அனைத்து தகவல்களையும் அறிய தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here