நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற நாள் இன்று

0
8

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற நாள் இன்று. கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை த்ரிஷா சென்னை என்ற பட்டத்திற்கு உரியவராக இருந்தவர். பின் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் முதன் முதலாக நடித்த படம் ஜோடி இப்படத்தில் இவருக்கு சிறிய கேரக்டர் மட்டுமே கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு, சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அந்தஸ்த்து பெற்றார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிய அளவில் உயர்ந்து வந்துள்ளார். தமிழ் சினிமாவில் நன்கு அறியப்படும் நபராக வலம் வருகிறார் த்ரிஷா.

அப்போதிலிருந்து இப்போது வரை ஓரே உடல் அமைப்பை கொண்டு சிறப்பாக தன் கதாபாத்திரங்களை நடித்து வருகின்றார். இவர் தன் 19 வது வயதில் சென்னையில் நடந்த அழகிகள் போட்டியில் கலந்து கொண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர். ஐந்து வருடத்திற்கு முன் வந்த திரைப்படம் 96 படத்தில் ஜானு கேரக்டரில் படத்தில் நடித்திருப்பார். அந்த கேரக்டரை இன்றும் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.

நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்ற நாள் இன்று

தற்போது, பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் குந்தவையாக நடித்து ரசிகர்களின் ஆராவாரத்தை பெற்றுள்ளார். அவர் அப்படத்திற்கான ப்ரமோஷனுக்காக பல மாநில ரசிகர்களை சென்று பார்த்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஆதரவை வேண்டி சென்று வந்தார். முதன் முறையாக ஓரு படத்தின் ப்ரமோஷனுக்கு சென்று வந்த அனுபவத்தையும் கூறியிருந்தார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரைக்டரும் அனைவரும் பேசும் வகையில் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றார். த்ரிஷாவின் ரசிகர்கள் வியந்து பார்க்கும் ஓன்று எப்படி இவ்வளவு வயது ஆனாலும், உடல் எடை எதுவும் கூடாமல் முதல் படத்தில் எப்படி இருந்தாரோ அதே போலவே இப்படம் வரை எப்படி இருக்கின்றார் என்ற கேள்வியே எழுகின்றதாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here