இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நாளை இறுதிச் சடங்கு

0
6

இரண்டாம் எலிசெபெத்: இவர் ஏப்ரல் 21, 1926 ம் ஆண்டு லண்டனில் பிறந்தார்.இவர் கடந்த செப்டம்பர் 8 ம் தேதி வயது மூப்பின் காரணமாக பக்கிங்ஹாம் அரண்மனையில் இறந்ததாக அரண்மனை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு வயது 96. விக்டோாியா மகாராணியின் 63 ஆண்டுகால சாதனையை முறியடித்து 70 ஆண்டுகாலம் ஆட்சி புாிந்தவா். உலகின் நீண்ட காலம் ஆட்சி புாிந்த  இரண்டாம் நபா் என்ற பெருமையை பெற்றிருக்கிறாா். அவர் இறந்த உடன் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்றுக் கொண்டார்.

இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசெபத் அவர்கள் 70 ஆண்டுகாலம் மக்கள் மத்தியில் நல்லாட்சி புரிந்து  அரண்மனை கிரீடத்தை அலங்கரித்து வந்தவர். அதனால் அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் 3 நாட்களாக பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான மக்கள் 8 கிமீ தூரத்துக்கு நின்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணியின் இறுதிச் சடங்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நாளை நடக்கிறது.

Queen elizebeth

ராணியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மூ அவர்கள் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து நேற்று தனி விமானத்தின் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். இந்திய ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அமெரிக்க அதிபர் பைடன், இந்திய ஜனாதிபதி முர்மூ உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் செய்து வருகிறது.

இறுதி சடங்கிற்கான முழு ஒத்திகையில் நேற்று இங்கிலாந்து இராணுவம் ஈடுபட்டது. குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியின் மீது ராணியின் உடல் வைக்கப்பட்டு, லண்டனில் உள்ள முக்கிய சாலைகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது. இறுதிச் சடங்கு முடிந்தவுடன் ராணியின் உடலுக்கு அருகிலேயே கடந்தாண்டு இறந்த ராணியின் கணவர் பிலிப்பின் உடலும் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதுவே இராணியின் கடைசி விருப்பமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here