2022 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிசை கலக்கிய டாப் 10 திரைப்படங்கள்

0
21

2022 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிசை கலக்கிய டாப் 10 திரைப்படங்கள் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் மூலம் அறியலாம்.

திரைப்படங்கள் ஓரு பொழுதுபோக்கு சார்ந்த செயலாக பார்க்கப்பட்டாலும் மக்களுக்கு பிடித்தமான விஷயங்களில் ஓன்றாக இருப்பதால் அதன் வளர்ச்சியும் பெரிதளவில் இருப்பதற்கு காரணம் கால சூழலுக்கு ஏற்ப சிந்தனைகளை மனிதன் உருவாக்கி அதன் மூலம் வெற்றி பெறுவதால் தான். இந்திய திரைப்படங்கள் உலக திரைப்படங்களுடன் போட்டி போடும் அளவிற்கு சற்றே உயர்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இந்த ஆண்டு 2022 முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த ஆண்டு மக்களிடம் நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிசை கலக்கிய டாப் 10 திரைப்படங்கள்

1.பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைக்கு கொண்டுவர பல ஆண்டு கால கனவினை மெய்ப்பித்தார் இயக்குனர் மணிரத்னம் அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் படங்களில் முதல் இடத்தை நிரப்பி வசூல் ரீதியாகவும் 500 கோடிக்கும் மேல் குவித்தது.

2.விக்ரம்

உலக நாயகனுக்கு Come Back கொடுத்திருக்கும் படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சினிமாட்ரிக் மூலம் வெற்றி கண்டவர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பீலிம்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைப்பில் உருவாகி அனைவரையும் கவர்ந்தது. வசூலில் 420 கோடிக்கு மேல் குவித்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

3. பீஸ்ட்

கோவிட் 19 க்கு பிறகு நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்ததது. இயக்குனர் நெல்சன் தீலீப் குமார் இயக்கத்தில் உருவாகி இருந்தது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக 236 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்து மூன்றாவது இடத்தை நிரப்பியது.

4. வலிமை

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் வலிமை. போனி கபூர் தயாரித்திருந்த இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த டாப் 10 பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது.

5. எதர்க்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் டாப் 10 பட்டியலில் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸீல் ரூ.175 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தாலும், விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தது. இப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

6. டான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபிசக்ரவர்த்தியின் உருவாக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லைக்கா மற்றும் சிவகார்த்திகேயனின் SK நிறுவனமும் இணைந்து தயாரித்து திரைப்படம் வசூல் ரீதியாக 125 கோடி அளவில் வெற்றி பெற்று 6ம் இடத்தை பெற்றது.

7. திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் எளிமையான கதைகளத்தை கொண்ட படமாக வெளியாகி வெற்றியில் பெரும் சாதனை புரிந்தது. இப்படத்தை கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கியிருந்தார். இப்படம் வசூலில் 110 கோடியை கடந்தது.

8. சர்தார்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து டாப் 10 பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

9. லவ்டூடே

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிகராக அறிமுகமாகி இக்கால சமூகத்திற்கு ஏற்றர் போல காதல் கதையும் அதில் கொஞ்சம் சமூக அக்கரையையும் காட்டி அதில் நல்ல வெற்றியையும் வசூலிலும் 80 கோடிக்கு மேல் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

10. வெந்து தணிந்தது காடு

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடித்திருந்த திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி கண்டது. டாப் 10 பட்டியலில் இந்த படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்: BIGG BOSS TAMIL 6: நேற்று வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் விபரம்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here