நைஸ் ஜென்டில் மேன் என அஜித்தை பாரட்டிய திருச்சி DC ஸ்ரீதேவி.
”ரசிகர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் வரக் கூடாது நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்கிறேன் என்று கூறினார். அதன்படி எங்களுக்கு ஓத்துழைப்பு கொடுத்தார், கடைசியாக ரொம்ப நன்றினு சொன்னார், என்னிடம் மட்டும் அல்ல கான்ஸ்டபுள் வரைக்கும் சொன்னார். உண்மையிலேயே நைஸ் ஜென்டில் மேன்” என திருச்சி DC ஸ்ரீதேவி கூறினார்.
47-வது மாநில துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25-ம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி வரையும், 29, 30, 31-ம் தேதி வரை ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் அஜித் போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி ரைபிள் கிளபிற்கு வந்தார். இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படை எடுத்த வண்ணம் இருந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணரிய காவல் துறை. இச்செய்தியை அஜித்திடம் கூறியது.
இதனால் ரைபிள் கிளபின் மாடிக்கு சென்று அஜித் ரசிகர்களை பார்த்து கை அசைத்து தம்சப் காட்டி பல ரசிகர்களிடம் புகைப்படமும் எடுத்து கொண்டார். இரவாகியும கைக் குழந்தையுடன் நின்றிருந்த ரசிகையை உள்ளே அழைத்து அவருடனும் புகைப்படம் எடுத்து ரசிகர்களை ஆரவாரத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், திருச்சி டிசி ஸ்ரீதேவி நடிகர் அஜித்தை பாரட்டியுள்ளார்.