திருச்சி: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உலகத்தரம் வாய்ந்த ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஓலிம்பிக் அகாடமி அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் ஓன்று தருச்சி எனவும் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் பன்னாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கக்கூடிய வகையில், உலகத் தரத்திலான விளையாட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்த பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், ஓலிம்பிக் போன்ற சர்வதேச அளவிலான் போட்டிகளில் தமிழக வீரர்கள் சென்று பதக்கங்களை பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஓரு அகாடமி நிறுவ திட்டமிட்டப்பட்டது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்குத் தமிழ்நாட்டு இளைஞர்கள் தயாராகவே ஒலிம்பிக் அகாடமி. உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வழங்கக்கூடிய வகையில் தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்பட உள்ளன.
தமிழர்களையும் தமிழக மக்களையும் செழிக்க வைப்பதே திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிய முதலமைச்சர் விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு அளிக்கும் போது இந்த திட்டத்தையும் அறிவித்தார்.
பெண்களுக்கு பலவித நன்மைகளை வழங்கியுள்ள இந்த ஆட்சி தொடர்ந்து மகளிர் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறி பல்வேறு மகளிர் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.