திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது

0
23

திருவல்லிக்கேணி இல்அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று வெகு விமர்சையாகத் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

பார்த்தசாரதி கோயில் 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சித்திரை தேர் திருவிழா இன்று தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சித்திரை பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி கோயில் நிர்வாகிகள் மற்றும் பணிகள் மட்டுமே கொண்டு இவ்விழா நடைபெற்றது.

இந்நிலையில், இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 2:45 மணி முதல் 3:45 மணிக்குள் பார்த்தசாரதி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் தேரில் எழுந்தருளினார்.

இன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்பட்டு அசைந்து அசைந்து நான்கு மாட வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கப்பட்டு 9.00 மணிக்கு தேர் நிலையை வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நாட்கள்

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஏப்ரல் 16ல் சித்திரை மாத  பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
  • 18ம் தேதி கருட சேவை உற்சவம் சிறப்பாக நடந்தது.
  • 20ம்தேதி நாச்சியார் கோலத்தில் பல்லக்கு சேவை நடந்தது.
  • விழாவின் முக்கிய நாளான, 22ம் தேதியான இன்று  தேர் திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் நடைப்பெற்று வருகிறது.
  • 23ம் தேதி வெண்ணெய் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை நடக்கிறது.
  • 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும் , இரவு 7:30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது.
  • 25ம் தேதி கொடி இறக்கத்துடன் விழா பூர்த்தியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here