த்ரிஷா: பொன்னியின் செல்வன், ராங்கி படங்களில் நடித்த த்ரிஷா அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2ம் பாக்த்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். விஜய் ஜோடியாக தற்போது ‘லியோ’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்பாேது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதற்காக த்ரிஷா காஷ்மீரில் இருக்கிறார். நேற்று முன்தினம் சிவராத்திரி என்பதால் அவர் காஷ்மீரிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு அவர் கையால் பாலாபிஷேகம் செய்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக த்ரிஷா ஆன்மீகத்தில் ஈடுபாடு செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இறுதியிலும் அவர் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வந்தார். வழக்கமாக தோழிகளுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்லும் அவர் கடந்த சில மாதமாக அதை தவிர்த்து ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் காட்டி வருகிறார். ‘லியோ’ படத்தில் நடிகர், நடிகைகள் பலருடன் அவர் நடித்து வந்தாலும் சிவன் கோயிலுக்கு தனியாகத்தான் சென்று வந்துள்ளார். யாரையும் அவருடன் அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.