த்ரிஷா: இன்றைய சினிமா உலகில் ஹீரோக்கள் அளவுக்கு ஹீரோயின்கள் அதிக ஆண்டுகள் நீடிப்பதில்லை. அதிகபட்சமாக ஹீரோயின்கள் 5 அல்லது 7 ஆண்டுகள் மட்டுமே ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். திருமணம் முடிந்த பின்னர் அம்மா அல்லது அக்கா போன்ற குணச்சித்திர வேடங்களே ஹீரோயின்களுக்கு கிடைக்கிறது. ஆனால் அன்றைய கால சினிமாவில் 15, 20 ஆண்டுகள் வரை ஹீரோயின்கள் கடைசி வரை ஹீரோயின்களாகவே நீடித்திருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் இப்படி நடப்பது அரிதாகிவிட்டது.
ஆனால் இன்றைய காலகட்டத்திலும் ஹீரோயினாகவே 20 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும் என்று நீரூபித்திருக்கிறார் த்ரிஷா. ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. பிறகு 2002ல் சூர்யாவுக்கு ஜோடியாக ‘மெளனம் பேசியதே’ திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்போது அவர் சினிமாவில் 20 வருடங்கள் கடந்ததையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் த்ரிஷாவுக்கு விழா நடத்தி கேடயம் பரிசளித்துள்ளனர்.
இது பற்றி த்ரிஷா கூறும்போது, ’20 வருட திரையுலக பயணத்தை நான் எதிர்பார்க்கவில்லை. மக்களின் அன்புதான் இங்குவரை என்னை கொண்டு சேர்த்திருக்கிறது. இனியும் அந்த அன்பு எதுவரை கொண்டு செல்கிறதோ அதுவரை செல்வேன். நடிப்பு தொழில் என்பதை தாண்டி எனது காதலாக மாறிவிட்டது. அதிலிருந்து என்னால் அவ்வளவு எளிதில் பிரிய முடியாது’ என்றார்.