த்ரிஷா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்ததாக நடிக்கும் படம் ‘லியோ’. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை லலித்குமார் தயாரிக்கிறார். சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷீட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்தது. இரண்டாவது ஷெட்யூலுக்காக விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்பட படக்குழுவினர் காஷ்மீர் சென்றனர். தொடர்ந்து 15 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் தலைப்பு அறிவுப்பு டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது. அங்கு கடும் பனிப்பொழிவுடன் குளிர் நிலவுவதால் த்ரிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காஷ்மீருக்கு சென்ற மூன்றே நாட்களில் அவர் சென்னை திரும்பியுள்ளார். அதே சமயம் தனது காட்சிகளை முடித்துவிட்டுதான் த்ரிஷா திரும்பியதாகவும், அவர் நலமாக இருக்கிறார் என்றும் படக்குழு தரப்பில் கூறியுள்ளனர்.