ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ராங்கி படம் பார்த்த த்ரிஷா

0
18

ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ராங்கி படம் பார்த்த நடிகை த்ரிஷா படம் முடிந்ததும் செல்பி எடுத்தும் அசத்தல்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதிய கதையை அவரின் துணை இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பு பணிகளை செய்துள்ளது. சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களை மையப்படுத்தி வரும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தருவது மிக சிறப்பாக உள்ளது என்றும் கூறினார் நடிகை த்ரிஷா. சினிமா துறைக்கு வந்து 20 வருடங்களை கடந்துள்ளார் த்ரிஷா.

ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து ராங்கி படம் பார்த்த த்ரிஷா

நயன்தாராவிற்கும் எனக்கும் ஆரோக்கியமான போட்டி நிலவி வந்தால் அது மகிழ்ச்சி என்றும் கூறினார். மேலும், நயன்தாராவை விருது விழாவில் சந்திப்பேன். அப்படியே பேசினால் கூட சினிமா பற்றியெல்லாம் பேச மாட்டோம். நயன்தாரா உள்பட எந்த நடிகையுடனும் எனக்கு நெருக்கமான நட்பு கிடையாது.

இந்த படத்தில் நான் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளேன். இது ஹூரோயின் முதன்மை படமாக இருக்கிறது. இது போன்ற படங்களில் நடிக்க பயமாக இருக்கும் ஏனெனில் படத்தின் வெற்றி தோல்வி பற்றிய பிரச்சனை தான் காரணம் என்றும் கூறினார். இது போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது நன்றி என்றும் கூறினார்.

இந்த நிலையில், இன்று நடிகை த்ரிஷா சென்னை ரோகிணி திரையரங்கிற்கு ரசிகர்களுடன் ராங்கி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்பார்ப்பதற்கு வந்துள்ளார். படம் முடிந்த பிறகு அங்கிருந்த ரசிகர்களுடன் த்ரிஷா செல்பியும் எடுத்துக்கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: துணிவு படத்தின் கதாபாத்திரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு படக்குழு அசத்தல்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here