த்ரிஷா: த்ரிஷா ஆரம்ப காலத்தில் மாடலிங்கில் ஈடுபட்டு பின்பு திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி தன் உழைப்பினால் இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழில் ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார் நடிகை த்ரிஷா. பின்பு தமிழில் லேசாலேசா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் சோழ நாட்டு இளவரசியாக குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடித்திருந்தார். இப்படத்தின் ஷீட்டிங் கடந்த ஒன்றரை வருடங்களாக நடைபெற்று வந்தது. ஷீட்டிங்கில் தொடர்ந்து பங்கேற்று வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட, சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு சென்றிருந்தார்.
பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுவிட்டு இந்தியா திரும்ப நினைத்திருந்த த்ரிஷா, திடீரென்று தனது காலில் காயம் ஏற்பட்டு கட்டு போட்டுள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு கீழே, ‘வெக்கேஷன் சென்றதற்காக எனக்கு கிடைத்துள்ள பரிசு இது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே சென்னையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சக்சஸ் மீட்டில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் த்ரிஷா.