ராங்கி: த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘ராங்கி’ படம் இன்று வெளியானது. இது குறித்து த்ரிஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது.
‘ராங்கி கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். அவரது ஆபிசில் சந்தித்து கதை கேட்டேன். பிறகு சரவணன் எனது லுக், மேனரிசம், ஸ்டைல் பற்றி சொன்னார். எனது அண்ணன் மகள் திடீரென்று கடத்தப்படுகிறாள். அவளை மீட்கச் செல்லும் நான் பேஸ்புக் பதிவு மூலம் சர்வதேச பிரச்சினை ஒன்றில் சிக்குகிறேன். உஸ்பெகிஸ்தானில் எனது ஆக்ஷ்ன் காட்சிகள் படமானது. ஸ்டண்ட் என்பது இயல்பாக இருக்கும். பறந்து, பறந்து எதிரிகளை தாக்க மாட்டேன். இப்படத்தில் நான் சூப்பர் வுமன் கிடையாது. சாதாரண நிரூபராக நடிக்கிறேன். படம் முழுவதும் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்.
மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் காெண்ட படத்தில் நடிக்க பயமாக இருக்கிறது. காரணம் அப்படத்தின் தோல்வி ஹீரோயினை கடுமையாக பாதிக்கும். ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொண்ட படம் என்றால் அதன் வெற்றி, தோல்வியை ஹீரோவும், இயக்குனரும் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ஹீரோயின் ஓரியன்டட் படங்களில் அந்த மாதிரி இல்லை. அதனால் இந்த மாதிரி படங்களில் நடிக்க சற்று பயமாக இருக்கிறது’ என்று த்ரிஷா கூறினார்.