ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு மாதம் ரூ1,600 வசூலிக்க முடிவு

0
16

ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு மாதம் ரூ1,600 வசூலிக்க மடிவு செய்துள்ளார் அந்நிறுவன தலைவர் எலான் மாஸ்க். அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. தற்போது, வரை இது இலவசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சமூக வலைத்தளங்கள் பெரிகி விட்டாலும் மிகவும் பிரபலமானவை சிலவே அதிலும் டிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏராளம் அதிலும் பிரபலமானவர்கள் அதிகம் உபயோகிப்பது டிவிட்டர் சமூக வலைதளத்தை தான் உடனுக்குடன் பல நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ள உலக அளாவிய வலைதளமாக இருப்பதால் உலக மக்களிடம் விரைவில் சென்று அடைவதில் டிவிட்டருக்கு சிறப்பு இருக்கிறது.

ஆதலால், அனைவரும் டிவிட்டர் கணக்கு துவக்கி அன்றாடம் செய்திகள் முதல் பொழுதுபோக்கு செய்திகள் வரை இதில் பகிர்ந்து வருகின்றனர். அரசு தரப்பு செய்திகளைக் கூட சமூக தளமான டிவிட்டரில் அனுப்பப்படுகிறது. அந்த அளவிற்கு டிவிட்டர் பிரபலம்.

இதையும் படியுங்கள்: இந்திய வம்சாவளியான டிவிட்டர் சிஇஓவை நீக்கிய எலன் மாஸ்க்

ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு மாதம் ரூ1,600 வசூலிக்க முடிவு

இந்த ட்விட்டரை உலக பணக்காரர்களில் முதன்மையாக விளங்கும் எலான் மாஸ்க் வாங்கி உள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே. அவர் டிவிட்டரை வாங்கியதும் அதில் பணியாற்றி இந்திய வம்சாவளியான தலைவர், நிர்வாக தலைவர் என பலரது பதவிகளில் இருந்து நீக்கினார். பல மாற்றங்களை செய்ய இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், பிரபலமானவர்களின் டிவிட்டர் கணக்குகளை நிர்வகிக்க ப்ளூ டிக் இடுவது டிவிட்டரின் வழக்கமாகும் இது நாட்கள் வரை இந்த சேவை இலவசமாக வழங்கி வந்தது. இனி அந்த ப்ளூ டிக் உள்ளவர்கள் மாதம் ரூ 16,00 செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிர்வாகி எலான் மாஸ்க தெரிவித்துள்ளார்.

பிரபலங்களின் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்படுவதன் காரணமாக பிரபலங்களின் உண்மையான டுவிட்டர் பக்கத்தை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு வசதியாக புளுடிக் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ப்ளூ டிக் கணக்கு வேண்டும் என்று பிரபலங்கள் தொழிலதிபர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த பின்னரே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இது போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை இனி வரும் நாட்களில் என்ன என்ன அறிவிப்புகளை தர காத்திருக்கிறார் எலான் மாஸ்க் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இது போன்ற பல தகவல்களை அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here