குலுகுலு படத்தின் திரையரங்கு உரிமையை வாங்கிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிட் மூவிஸ்.
நடிகர் சந்தானம் விஜய் டீவியில் மிமீக்ரி ஆர்டிஸ்டாக அறிமுகமானார். பலகுரல்களில் பேசி அனைவரையும் கவர்ந்தவர். லொல்லு சபாவில் இவர் அடிக்கும் நகைச்சுவைகள் மூலம் பிரமாலமானார். அதன் பின் தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராக தடம் பதித்தார். இவர் டைமிங் காமெடி செய்வதில் தேர்ந்தவராக இருந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் நடித்த படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். பின் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்து தன் முதல் படமான அரை எண் 350 ல் கடவுள் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர், கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்குதுட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலானோ, சபாபதி, முகவர் கண்ணாயிரம் என அடுத்தடுத்து படங்களை கொடுத்து வந்தார்.

நகைச்சுவை நாயகராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் மக்கள் இவரை ஏற்றுக் கொண்டனர். இதனால் இவரது படங்கள் ஓரளவுக்கு வெற்றியும் கண்டன தற்போது சந்தானம் “குலு குலு” என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேயாத மான் புகழ் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மே மாதம் வெளியானது. அதில் சந்தானம் கவிழ்ந்த லாரியின் முன்னால் அமர்ந்து ரம்மி விளையாடுவது போன்ற காட்சிகள் இருந்தன.
இந்த படத்தில் சந்தானத்துடன் ஜார்ஜ் மரியான், தீனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான இந்த படத்தை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 29 ல் வெளியாகிறது.
இதற்கான திரையரங்கு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிட் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நெட் ஓர்க் வாங்கியுள்ளது. இப்படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.