ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக 2008 ம் ஆண்டில் ரெட் ஜெயின் மூவிசின் மூலம் முதல் முதலில் அடி எடுத்து வைத்தார். முதல் படமே இளைய தளபதியின் குருவி படத்தை தயாரித்து வெளியிட்டார். தொடர்ந்து சூப்பர் ஹீட் ஆன படங்களான சூர்யாவின் ஆதவன், கமலின் மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு வெளியிட்டுதுடன் திரையரங்கு விற்பனையிலும் ஈடுப்பட்டது.
சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மதராசப்பட்டினம்’, என பல டிஸ்ட்ரிபியூஷனிலும் இறங்கியது. இந்த ஆண்டு ரஜினியின் ‘அண்ணாத்த’, நயன்தாராவின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ‘டான்’, கமலின் ‘விக்ரம்’, மாதவனின் ‘ராக்கெட்ரி’ ஆகிய படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது. அடுத்தும் ‘குலுகுலு’ ‘கோப்ரா’ அமீர்கானின் ‘லால்சிங் சத்தா’, திருச்சிற்றம்பலம்’, ‘வெந்து தணிந்தது காடு’ ‘சர்தார்’, ‘கேப்டன்’ ஆகிய படங்களை தனது பேனரில் வெளியிட காத்திருக்கிறது.

உதயநிதி நல்ல அரசியல் தலைவராகவும் ஓரு எம்.எல்.ஏ வாகவும் இருந்து கொண்டு பன்முக தன்மையுடன் இயங்குகிறார். இந்நிலையில், ரெட் ஜெயின்ஸ் மூவிசின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் நேற்று தனியார் ஹேட்டலில் நடந்தது.
இதில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், தனது அடுத்த படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க உள்ளதாக சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள 54-வது படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.