கார்கி படம் பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் தகவல்.
நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கும் படம் கார்கி. இந்த படம் இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும் என கூறியுள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் வருகின்ற 15 ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிரகாஷ், பிரதாப், லிவிங்ஸ்டன், கவிதாலையா கிருஷ்ணன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஓருவராக ஐஸ்வர்யா லட்சுமி இருக்கிறார். பிளாக்கி, ஜீனி, மற்றும் மை லெஃட்புட் புரோடக்ஷ்ன் தயாரித்துள்ளது.

2டி எண்டர்டைன்மண்ட் நிறுவனமான சூரியா ஜோதிகா இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். கெளதம் ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். கோவிந் வசந்தா இசையமைத்துள்ளார். ஸ்ரீசாந்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா ஓளிப்பதிவு செய்துள்ளனர்.
இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது பெற்றோர்களும் குழந்தைகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இவ்வாண்டின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்படும் எனவும் திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.