உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14ல் அமைச்சராக பதவி ஏற்கிறார். தற்போது, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தி.மு.க இளைஞர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார்.
தமிழகத்தின் மு.க.ஸ்டாலினின் தி.மு.க சார்பில் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலினின் மகன் உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தன் வேலையை சிறப்பாக ஆற்றி வருகிறார். இடையே சினிமா துறையிலும் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மக்களிடம் இன்னும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அமைச்சர்கள் முதல் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது சம்பந்தமாக ஆளுநருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல, சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித் துறையும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த கே.ஆர்.பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்காக தலைமைச் செயலகத்தில் அவருக்கு புதியதாக அறை ஓன்றை தயார் செய்து வருகின்றனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தில் பாருங்கள்.