உதயநிதியின் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் கலக தலைவன் இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற வருகிறது.
நேற்று கலக தலைவன் திரைப்படத்தை சிறப்பு காட்சி மூலம் சென்னையில் உள்ள திரையரங்கில் இப்படத்தை பார்த்த தமிழக முதல்வரும் உதயநிதியின் தந்தையுமான மு.க. ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை தந்திருக்கிறீர்கள் என்றும் கூறி படக்குழுவினரை பாராட்டினார்.
இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் ரிலிஸாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் நடித்துள்ளார். கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து உள்ளனர்.

இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. தடம், மீகாமான் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இருந்து ரசிகர்களை கைத்தட்ட வைக்கும் அளவு இருக்கிறது.
இந்த படத்தை 2019 ம் ஆண்டே பணிகள் நடைபெற்று வந்தது பின் கொரோனா கட்டுபாடுகள் என கடந்த மூன்று வருடங்களை எடுத்து கொண்டது. பின் நெஞ்சுக்கு நீதி படத்தையும் முடித்து விட்டு வந்தவரை இப்படத்தில் இணைத்து இப்போது இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது என இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: உலக நாயகனின் 233 வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்
இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சியை தமிழக முதல்வர் மற்றும் அவரது மனைவி துர்காவும் இணைந்து பார்த்தனர். இப்படத்தின் இயக்குனரை ஸ்டாலின் பாராட்டினார். மிகவம் எதிர்பார்க்கப்பட்ட கலக தலைவன் திரைப்படம் இன்று உலமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.