டவ் ஷாம்புகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது யூனிலிவர் நிறுவனம்

0
25

டவ் ஷாம்புகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது யூனிலிவர் நிறுவனம். புற்றுநோய் ஏற்படும் அபாயத்தால் அதனை திரும்ப திரும்ப பெற மடிவு செய்துள்ளது இந்நிறுவனம்.

டவ் உள்ளிட்ட உலர்ரக ஷாம்புகளில் உள்ள ரசாயனக் கலவையால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகளில் தகவல்களை வந்துள்ளதால் அக்டோபர் 21 வரை தயாரிக்கப்பட்ட Dove, Nexuas, Sauve, Tresemme, Tigi போன்ற பிராண்டுகளை அமெரிக்க சந்தையிலிருந்து திரும்ப பெறுகிறுவதாக யூரிலிவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் ரத்தப் புற்றுநோய், லுகிமேனியா நோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பதையடுத்து, ஷாம்பு பிராண்டுகளை திருமப்ப் பெறுவதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

டவ் ஷாம்புகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது யூனிலிவர் நிறுவனம்

ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நியூட்ரோஜினா, எட்ஜ்வெல் பெர்சனல் கேர் பனானா போட், பியர்ஸ்சர்ப் காப்பர்டோன் ஆகிய பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்தப் பொருட்களில் ரத்தப் புற்றுநோய், லுகிமேனியா உருவாக்கும் பென்ஜின் இருப்பது அமெரிக்காவின் கனெக்ட்கட் நகரில் உள்ள வலிசியூர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஏரோசோல் ட்ரை ஷாம்பு தொடர்பான 19 வகை பொருட்களையும் யூனிலீவர் நிறுவனம் அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட பொருட்களால் எந்த பாதிப்பும் இதுவரை நுகர்வோர்களுக்கு ஏற்படவில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த பொருட்களை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடைகளில் தங்களின் ஷாம்பு வகைகளையும் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு உரிமையாளர்களுக்கும் யூனிலீவர் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவில் மட்டுமே திரும்ப பெறப்படுகின்றது. இந்தியாவில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் வர்த்தகம் எந்த அளவிலும் பாதிப்பு இல்லை, டவ் ஷாம்பு உள்ளிட்ட வகைகள் தொடர்ந்து விற்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here