இந்தியாவில் 5G சேவை விரைவில் தொடங்கும்

0
5

இந்தியாவில் 5G சேவை விரைவில் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் ஏற்கனவே 5G தொடங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் தற்போது தான் அதற்கான ஏற்பாடுகளை விரைவில் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஏலம் ஜூலை மாதம் நடைபெறும் பின்னரே படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இணையம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகிறது. மக்களின் தேவைகளை எளிதாக்குகிறது. இணையத்தின் வாயிலாக உலகத்தில் பல ஆயிரம் தூரம் உள்ள மனிதரிடம் பேசவும் பார்க்கவும் மகிழவும் பெரும் துணை புரிகிறது. இணையத்தின் வேகத்தை துரிதப்படுத்தும் போது நமக்கு விரைவான சேவை வழங்கும்.

5ஜி அலைகற்றைக்கான ஏலத்தேதி அறிவிப்பு

1G, 2G,3G,4G என பல ஜிகளை சேர்த்து கொண்டே போக போக நமக்கு துல்லியமான இணைய சேவை கிடைக்கும். இதனை ஓன்றாம் தலைமுறை, இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறை என தற்போது ஐந்தாம் தலைமுறையை காணப் போகிறோம். அடுத்தக்க்ட்டமாக ஆறாம் தலைமுறையான 6G யை நோக்கியும் செல்வோம்.

முதன் முதலில் 1G 1970 ஆம் ஆண்டில் ஜப்பானில் தொடங்கியது. அதில் குரல் ஓலியை மட்டுமே பெற முடிந்தது. அதிலும் துல்லியதாக இல்லை பல சிக்கல்கள் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1991ல் 2G சேவை ஏற்படுத்தப்பட்டது புது உத்வேகம் போல் இணையம் செயல்பட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயமாகவும் மாற்றம் அடைந்தது. தொடர்ச்சியாக, 2001ம் ஆண்டு 3G சேவை கிடைக்கப்பட்டு மின்னஞ்சல், வீடியோ அழைப்பு, வழிசெலுத்தும் வரைபடங்கள், இணையத்தில் உலாவுதல் மற்றும் மொபைல் போன்களில் இசையைக் கேட்பது போன்ற வசதிகள் கிடைக்கத் தொடங்கியது.

3ஜிக்கு அடுத்ததாக 4ஜி சேவை 2010 ல் அறிமுகமானது இணையம் அனைவருக்கும் எளிமையானது வேகம், உயர் தரம் மற்றும் நல்ல குரல் அழைப்பு மற்றும் டேட்டா சேவைகள் பன்மடங்கு சிறப்பாக மாறியது. இதன் வேகம் 3ஜியை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகம்.

இன்று 4ஜி இணையம் வாயிலாக பல நன்மைகளை பெறுகிறோம். உணவு ஆர்டர் செய்தல், மளிகைப் பொருட்கள் முதல் அனைத்தையும் அர்டர் செய்து நாம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்கிறது என்றால் 4ஜி உதவியுடனே நடக்கிறது. நேரடியாக எதையும் அமர்ந்த இடத்திலிருந்தே பார்க்க முடியும் என இதன் சேவை நீள்கிறது. 4ஜியை அடுத்து 5ஜி சேவையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி கடந்த மே மாதம் 19 ஆம் தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வசதிக்காக ஹைப்பர்லூப்பை உருவாக்கிய மாணவர்களுடன் மத்திய ரயில்வே, தகவல், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார்.

பின்னர் 8 ஐ.ஐ.டி நிறுவனங்களின் கூட்டுமுயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள 5G நெட்வொர்க் சேவையையும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு, தொழில் முனைவோர்களின் புதிய கண்டுபிடிப்புகளை பாராட்டினார்.

முதற்கட்டமாக 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதம் 26 ம் தேதி நடைபெறும் எனவும்,2023 மார்ச் மாதம் முதல் 5ஜி சேவை இந்தியாவில் தொடங்கும் எனவும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்தார்.

வரவுள்ள 5 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்கள், புதிய நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

5ஜி மூலமாக இன்னும் வேகம் எடுக்கும் இணைய தொழில்நுட்பம் பலமடங்கு எண்ணற்ற தரவுகளையும் நிடத்தில் தரக்கூடியதாக இருக்கும். இதனால் உலகம் வியக்கத்தக்க வேகத்தை பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here