ஒன்றிய அரசு: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜூனாவை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஐதராபாத்தில் நேரில் சந்தித்து பேசினார். ஒஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நடிகர் நாகார்ஜூனாவும், சிரஞ்சீவியின் உறவினரும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்தும் உடனிருந்தனர். இதில் இந்திய திரைப்படத்துறையின் வேகமான வளர்ச்சி குறித்தும், திரைத்துறை கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சந்திப்பை தொடர்ந்து சிரஞ்சீவியும், நாகார்ஜூனாவும இணைந்து ஒன்றிய அமைச்சருக்கு கணபதி சிலையை அன்பளிப்பாக வழங்கினர்.
இதுதொடர்பாக சிரஞ்சீவி தனது டிவிட்டர் பதிவில், ‘ஐதராபாத் வருகையின் போது எனது வீட்டிற்கு வர நேரம் ஒதுக்கிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றி. இந்திய திரைப்படத்துறை மற்றும் அதன் வேகமான முன்னேற்றம் குறித்து எனது சகோதரர் நாகார்ஜுனாவுடன் சேர்ந்து நடத்திய மகிழ்ச்சிகரமான விவாதம் மிகவும் பிடித்திருந்தது’ என தெரிவித்துள்ளார்.