சிவகார்த்திகேயன் டபுள் ஆக்ட் இயக்குனர் பொன்ராம் அறிவித்த அப்டேட்

0
6

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் உருவாக்கிய படம் ரஜனிமுருகன் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் 2 பாகத்தில் சிவாவிற்கு டபுள் ஆக்ட் கதாபாத்திரத்தில் கதை தயாராகிறது.

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரும் வெற்றி படமாகவும் திருப்புமுனையாகவும் அமைந்த படம் வருத்தபடாத வாலிபர் சங்கம் இப்படத்தை இயக்குனர் பொன்ராம் உருவாக்கினார். இப்படத்தில் சிவாவின் நண்பராக வலம் வந்தவர் சூரி இவர்களின் அலப்பறைகளால் இப்படம் முழுக்க சிரிக்க வைத்து ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தில் நடிகை திவ்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக ரஜினி முருகன் படத்தையும் பொன்ராம் இயக்கத்தில் இதுவும் காமெடி கலாட்டா நிறைந்த படமாக இருந்ததால் இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் டபுள் ஆக்ட் இயக்குனர் பொன்ராம் அறிவித்த அப்டேட்

அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் சீமராஜா, எம்.ஜி.ஆர்.மகன் போன்ற படங்கள் அவருக்கு பின்னடைவை தந்தது. தற்போது, நடிகர் விஜய்சேதுபதியை வைத்து டிஎஸ்பி என்ற படத்தை இயக்கி உள்ளார் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

இந்நிலையில், சிவா நடிப்பில் உருவான ரஜினி முருகன் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து ரஜினி முருகன் 2 பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் பொன்ராம்.

யுனிவர்ஸ் உருவாக்கும் ஐடியா இருப்பதாக கூறினார். அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்தை விக்ரம் படத்தோடு இணைத்திருந்தது போல் தனது படங்களை இணைக்க உள்ளதாக கூறியுள்ளார் பொன்ராம்.

இதையும் படியுங்கள்: இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியான படங்கள் விபரம்

அதன்படி தனது இயக்கத்தில் வெளியான ரஜினிமுருகன் படத்தின் இறுதி காட்சியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் போஸ் பாண்டி கேரக்டர் இடம்பெறுவது போல் காட்டி இருப்பேன். அதேபோல் ரஜினிமுருகன் இரண்டாம் பாகத்தில் இரண்டு சிவகார்த்திகேயன், இரண்டு சூரி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரை மையமாக வைத்து கதை தயார் செய்துவிட்டதாக கூறியுள்ளார். இப்படத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.

இது போன்ற பிற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here