அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் உலகின் NO 1 விராங்கனையான போலாந்தை சார்ந்த ஸ்வியாடெக்.
ஆண்டு தோறும் நடத்தப்படும் போட்டிகளில் அமெரிக்க ஓபன் டென்னிசும் ஓன்று. இந்த ஆண்டுக்கான போட்டிகள் நியூயார்கில் நடக்கிறது. கடந்த மாதம் ஆகஸ்ட மாதம் 29ம் தேதி தொடங்கி செப் 11ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான பரிசு தொகையாக 60 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 479 கோடி ரூபாய் இதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படித்து பயன்பெறுக: டைமன்ட் லீக் போட்டியில் பதக்கம் முதல் இந்தியரானார் நிரஜ் சோப்ரா
மேலும், ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு (2.6 மில்லியன் டாலர்கள்)சுமார் 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. தவிர, மெயின் டிராவுக்கு மட்டும் 6 கோடி ரூபாய் ($80,000) வழங்கப்படும் மற்றும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள் 9 கோடி ($121,000) பெறுவார்கள் என்றும் யு.எஸ். டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஐந்தாவது வரிசையில் உள்ள ஆன்ஸ் ஜபேர் (துனிசியா)-கரோலின் கார்சியா (பிரான்ஸ்) மோதினார்கள். இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கார்சியாவை எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு ஜபேர் தகுதி பெற்றார்.
28 வயதான ஜபேர் முதல்முறையாக அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் அவர் இறுதிப் ஆட்டத்துக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையை படைத்து இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, மற்றொரு அரை இறுதியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்வியாடெக், பெலாரஸைச் சேர்ந்த ஷபலென்காவை எதிர்கொண்டார். தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் ஷபலென்கா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வென்று ஸ்வியாடெக்கிற்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட ஸ்வியாடெக் அடுத்த இரண்டு செட்டுகளையும் தொடர்ச்சியாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
21 வயதான அவர் அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டிக்கு முதல்முறை முன்னேறியிருக்கிறார். இரண்டு முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை கைப்பறற்றியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு ஸ்வியாடெக் மூன்றாவது முறையாக முன்னேறியிருக்கிறார்.
இது போன்ற விளையாட்டு மற்றும் அனைத்து விதமான தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.