சுற்றுச்சூழுலை மாசுப்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்துங்கள்

0
5

சுற்றுச்சூழுலை மாசுப்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை தீபாவளிக்கு பயன்படுத்துங்கள் என்று அரசு பல வருடங்களாக சொல்லி வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு முதல் அரசு அறிவிப்பாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஓவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை உலகம் மழுவதும் உள்ள இந்து மதத்தினர் முதல் அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக உள்ளது. தீபாவளி பண்டிகை ஜாதி, மதம் கடந்து மக்கள் ஓருவரை ஓருவர் புரிந்து தன் வீட்டில் செய்த உணவு பண்டங்களை உறவினர்க்கு மற்றும் வீட்டின் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு கொடுத்து மகிழ்வர்.

தீபாவளி அன்று மிகவும் முக்கிய ஓன்றாக வானை முட்டும் வெடி சத்தங்களும் இரவில் விண்ணை முட்டும் வண்ணங்கள் நிறைந்த பட்டாசுகளும் உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வானையே வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது போல தீபாவளி அன்று பட்டாசு மற்றும் வானவேடிக்கைகள் விளங்குகிறது.

சுற்றுச்சூழுலை மாசுப்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை பயன்படுத்துங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை கொண்டாடி வருவது சிறப்புக்குரியது. இந்நிலையில், 2018ம் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசுப்படாத பட்டாசுகளை தயாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 2019ல் CSIR அமைப்பு பசுமை பட்டாசுகளின் மூலக் கூறுகளை உருவாக்கியது. சாதரண பட்டாசுகளை விட பசுமை பட்டாசுகளில் சுற்றுச்சூழல் மாசு 50 சதவீதம் குறைவாக இருக்கும்.

பசுமை பட்டாசுகளை வெடித்ததன் பின்னர் கரியாக மாறாமல் நீர்நீர்த்துளிகளாக மாறும் உருமாறும் வகையில் இப்பட்டாசுகள் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் பல மாநில அரசுகள் இவ்வகை பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டும் தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஒரு மணி நேரமும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் ஒரு மணி நேரமும் என 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here