கரிசலாங்கண்ணி கீரையின் நன்மைகள்

0
12

கரிசலாங்கண்ணி கீரை: கீரைகளின் ராணி என்று அழைக்கப்படும் இந்த கரிசலாங்கண்ணிக் கீரையில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. இது உடலில் ஏற்படும் பலவித நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என இரு வகை உண்டு. இவற்றை மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பூக்களை கொண்டு அடையாளம் காணலாம். இவற்றின் பயன்களை காண்போம்.

இதன் இலைச்சாற்றை 2 துளி தேனில் கலந்து பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்தால் ஜலதோஷம் சரியாகும்.

யானைக்கால் நோயுள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை நல்லெண்ணெயில் அரைத்து்  அதை கால் மீது தொடர்ந்து பூசி வந்தால் யானைக்கால் விரைவில் குணமாகும்.

சிறுநீரக பாதை கோளாறு, சிறுநீரக கடுப்பு , சிறுநீரகத்துடன் இரத்தம் வருதல் போன்றவற்றிற்கு இந்த இலைச்சாற்றை தினமும் இரு வேளை எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சினை விரைவில் குணமாகும்.

மஞ்சள் காமாலை உட்பட அனைத்து காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை மிக முக்கியமானதாக செயல்படுகிறது. இந்த இலைச்சாற்றை தினந்தோறும் 100 மில்லி அளவு எடுத்துக்கொண்டால் கல்லீரல் செயல்பாடு குறைவினால் ஏற்படும் ரத்த சோகை நோய் சில தினங்களில் குணமாகிவிடும். ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராக செயல்படும்.

தேள் கடித்த இடத்தில் இந்த இலைச்சாற்றை அரைத்து தடவி அதை அப்படியே அந்த இடத்தில் வைத்து கட்டி விட்டால் அதில் உள்ள விஷத்தன்மை நீங்கும். இந்த இலையை வேகவைத்து ஆவி பிடித்தால் மூல நோய் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக்கீரை முடி நன்கு அடர்த்தியாக கருமையாக வளர உதவும். இந்த இலையை நன்கு காயவைத்து தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தொடர்ந்து தலைக்கு தடவி வந்தால் முடி நன்கு கருமையாக வளரும்.

karisilankanni plant benefits

கரிசலாங்கண்ணி இலையை காயவைத்து அரைத்து பொடியாக்கி பல் தேய்த்து வந்தால் பற்கள் வலுப்பெறும்.

இந்த இலைச்சாற்றை 70மில்லி எடுத்து நல்லெண்ணெய் 700 மில்லி சேர்த்து மிதமான தீயில் பக்குவமாக தைலமாக காய்ச்சலாம். இந்த தைலத்தை காலையிலும் மாலையிலும் 5 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

கரிசலாங்கண்ணி தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகி கண் எரிச்சல் குறையும். காது வலி குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here