ராபின் உத்தப்பா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

0
12

ராபின் உத்தப்பா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். CSK அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் இவர் ஓய்வை அறிவித்திருந்த நிலையில் ராபின் உத்தப்பாவும் ஓய்வை அறிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் டி20 போட்டிகளில் விளையாடிய உத்தப்பா அணியின் வெற்றிக்காக பலமுறை வெற்றியை பெற்று தந்துள்ளார். கடந்த சென்னை அணி கோப்பையை வென்ற பொழுதும் கூட தன் பங்களிப்பை நன்றாக அணிக்காக கொடுத்துள்ளார்.

உத்தப்பா இதுவரை T20 போட்டிகளில் 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நெட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் என ஐபிஎல்லில் ஆறு அணிக்காக விளையாடி உள்ளார்.

உத்தப்பா 2002-03ஆம் ஆண்டில் கர்நாடக அணிக்காக உள்ளூர் தொடர்களில் பங்கேற்க ஆரம்பித்து. இதுவரை 142 முதல்தரப் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 9446 ரன்களை எடுத்துள்ளார். 291 டி20 போட்டிகளில் 133.08 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 7272 ரன்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் உத்தப்பா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

ஓய்வு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் ராபின் உத்தப்பா ரசிகர்களுக்கு உருக்கமான கடிதத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 வருடங்கள் ஆகிறது. எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்.

இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த பிசிசிஐயின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here