வைகுண்ட ஏகாதசி இந்து சமயவைணவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஓன்றாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் வளர்பிறை பதினொராம் நாள் வைகுண்ட ஏகாதசி அனைத்து பெருமாள் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகின்ற 2023 ஆம் புதிய ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 2ந் தேதி வைகுண்ட ஏகாதாசி கொண்டாடப்பட உள்ளது.
108 திவ்யவைணவத் தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருகோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து காலம் இராபத்து காலம் என வைகுண்ட ஏகாதசி முன்னரும் பின்னரும் தொடர்ந்து 20 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டுக்கான பகல்பத்து கால உற்சவங்கள் டிசம்பர் 22ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பகல்பத்து உற்சவத்தின் இறுதி நிகழ்வாக வரும் ஜனவரி 01- ம் தேதி மோகினி அலங்காரமும், முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் ஜனவரி 02- ம் தேதி திங்கள் கிழமையும் நடைபெறுகிறது. ( மார்கழி மாதம் 18ஆம் தேதி). இந்த சொர்க்கவாசல் திறப்பு என்பது சரியாக அதிகாலை 04.45 மணிக்கு நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவானது ஜனவரி – 12-ம் தேதியன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.
இதையும் படியுங்கள்: சிதம்பரம்: ஆருத்ரா தரிசனத் திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கியது
ஏகாதசி அன்று நடைபெறும் சொற்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பெருமாள் சொற்கவாசல் வழியே பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்து அதே சொற்கவாசல் வழியாக பக்தர்களும் வந்து பெருமாளை தரிசனம் செய்வது இந்த வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.