இந்தியன் 2 படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்

0
7

கமல்ஹாசன்: மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக வலிமை பட இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் கமல்ஹாசன். விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்தியன்2 படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பட்ஜெட் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கும் லைக்கா நிறுவனத்துக்கும் இடையே நடந்த மோதல்தான் காரணமாக இருந்தது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரண்டு தரப்பும் சமாதானம் அடைந்தது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினும் இந்த படத்தின் தயாரிப்பில் இணைந்தார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இதன் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிகிறது.

h.vinoth to direct kamalhasan's next film

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளன்று கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு உருவாகவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இந்தியன் 2 படத்திற்கு பிறகு மணிரத்னம் படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நவம்பரில்தான் தொடங்க உள்ளது. அந்த படம் 2024ம் ஆண்டு இடையில்தான் திரைக்கு வர உள்ளது. இதனால் இந்தியன்2 படப்பிடிப்பை முடித்ததும் அடுத்த ஆண்டு மே மாதம் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பை 6 மாதங்களில் முடிக்க வினோத் திட்டமிட்டுள்ளாராம். இது ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here