வடலூரில் வள்ளலார் மையம் அமைக்கப்படும்-மு.க.ஸ்டாலின். அந்த வள்ளலார் மையம் மூலம் ஓராண்டு முழுவதும் 100 கோடியில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அவதார புருஷராக ‘மனிதனின் பசியை ஆற்றும் அறமே உயர்ந்த அறம்’ என்றும் தன் வாழ்நாள் முழுவதும் பசித்து வருபவர்களுக்கு உணவு அளிக்க முற்பட்டு தர்மசாலை ஓன்றை உருவாக்கி அணையா அன்னதானத்தை தொடங்கி வைத்தவர். “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக” பாடிய மாபெரும் மேதை வள்ளார்.
வள்ளலாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலிஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலாரின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், வள்ளலாரின் தபால் தலையை முதல்வர் ஸ்டாலின் தொங்கி வைத்தார்.

அதன்பின் அவர் கூறியதாவது: வடலூரில் 100 கோடி ரூபாயில் வள்ளலார் மையம் அமைக்கப்படும்; வள்ளலாரின் 200 வது பிறந்த நாளையொட்டி இந்த ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வள்ளலாரின் பிறந்த நாளையொட்டி, ஓராண்டு தொடர் அன்னதானத்திற்கு ரூ.3.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கே.என். நேரு உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் 'தனிபெருங்கருணை நாள்' முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்தார் pic.twitter.com/yMyx9UqCAo
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 5, 2022
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்ப்பில் வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல திமுக, ஆன்மிகத்தை அரசியலுக்கும் சுயநலத்துக்கும் பயன்படுத்துவதற்கு எதிரானதுதான் திமுக ஆட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வள்ளலார் பிறந்நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் கவனியுங்கள்: அருட்பெரும் ஜோதியான வள்ளாரின் 200வது பிறந்த நாள் இன்று
இன்று வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலை தொடங்கியதன் 156-ம் ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.