வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது

0
9

வந்தே பாரத் ரயில் என்பது முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் இந்த ரயிலின் சோதனை ஓட்டத்தின் போது சுமார் 180 கி.மீ வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் மிகப் பெரும் பயணங்களின் நாயகனாக இருப்பது ரயில். நாட்டின் மிகப்  பெரிய துறையாக இருப்பதும் ரயில்வேத் துறை தான். பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. விமானங்களில் அனைவராலும் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் ரயில் பயணங்கள் மூலம் அவர்கள் நிம்மதி அடைவார்கள். ஏனெனில் விமாத்தில் பயணம் செய்ய நிறைய செலவாகும்.

குறைந்த செலவில் தாம் செல்ல வேண்டிய இடத்திற்கு இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை ரயில் சேவை இயங்குகிறது. மிக குறைந்த முதலீடுகளால் மக்களுக்கு சேவை செய்வதால் ரயில்வேத் துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும் கூறுவதுண்டு. இதனால் ஜப்பானை போல அதிவிரைவு ரயில் மற்றும் பல மேம்பட்ட திட்டங்களை இந்திய அரசால் தர முடியாமல் இருந்தது.

வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது

இந்நிலையில், வந்தே பாரத் என்ற விரைவு ரயில் சேவை திட்டத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டிருந்தது. இது மழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரயில். அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் 180 கி.மீ வேகத்தில் சென்று தன் இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ், வந்தேபாரத்-2 சோதனை ஓட்டத்தில் 180 கிமீ வேகத்தில் சென்றதாகப் பதிவிட்டுள்ளார். கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையே இந்த வேகச் சோதனை நடத்தப்பட்டது. முதலில் 120 கிமீ வேகத்தில் செல்ல தொடங்கிய ரயில்களின் வேகம் மெல்ல 130,140 என படிப்டியாக உயர்த்தப்பட்டு 180 கிமீ வேகம் வரை அடைந்தது.

மொத்தம் 16 ரயில் பெட்டிகளை இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோட்டா பிரிவில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. கோட்டா முதல் ராம்கஞ்ச் மண்டி வரையிலான பகுதிகளில் இந்த விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here