ஆதித்ய கரிகாலனாக நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வம் பாகம் 1ல் நடித்துள்ளார். இப்படத்தில் வரும் வசனத்தை விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கு நடிகர் கார்த்தி பதில் அனுப்பி டிவிட் செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்தின் பிரோமோஷனுக்காக விக்ரம் மற்றும் திரிஷா தன் டிவிட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரத்தின் பெயர்களை மாற்றி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். விரைவில் அப்படத்தில் நடித்த அனைவரும் தன் டிவிட்டர் கணக்கில் தற்காலிகமாக மாற்றுவார்கள் என கருதப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. மணி ரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி மற்றும் கமல் பங்கு கொண்டனர். பல சுவாரசிய தகவல்கள் அதில் நிகழ்ந்து பரப்பரப்பை ஏற்படுத்தியது. இது விரைவில் சன்டிவியில் ஓளிப்பரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்ய கரிகாலனாக விக்ரம் அப்படத்தின் வசனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me. pic.twitter.com/ak7Do9yBrK
— Actor Karthi (@Karthi_Offl) September 13, 2022
வந்தியதேவனாக நடித்துள்ள கார்த்தி ஆதித்ய கரிகாலனுக்கு பதில் தெரிவித்து டிவிட் செய்துள்ளது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.