மாபெரும் காமெடி தர்பாரில் உருவாகியுள்ள வரலாறு முக்கியம் என்ற படம்

0
7

மாபெரும் காமெடி தர்பாரில் உருவாகியுள்ள வரலாறு முக்கியம் என்ற திரைப்படம் வருகின்ற டிசம்பர் 9ம் தேதி உலகெங்கிலும் வெளியாகிறது. இப்படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்கிறார் நடிகர் ஜூவா.

வரலாறு முக்கியம் என்ற திரைப்படம் வருகிற 9ம் தேதி ரிலிசாகிறது. இந்த நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் ஜூவா இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி என்ற படத்தினை போல மிகப் பெரும் நகைச்சுவை இருக்கும் என்றார்.

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜூவா, அனுயா பகவத், ஊர்வசி, சந்தானம், ஆர்யா, ஸ்நேகா முரளி எனப் பலர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் நகைச்சுவை படமாக இருந்ததால் மாபெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்கள் இன்றளவிலும் இப்படத்தை பார்த்தால் வயிறு குலுங்க குலுங்க சிரிப்பார்கள் இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார். அவருக்கு இந்த படம் முதல் படம். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்றார் இயக்குனர்.

மாபெரும் காமெடி தர்பாரில் உருவாகியுள்ள வரலாறு முக்கியம் என்ற படம்

இந்நிலையில், பத்திரிக்கையாளர் மத்தியில் பேசிய ஜூவா ரசிகர்கள் வெகு நாட்களாக SMS போன்றதோரு படத்தை தாருங்கள் என்று கேட்டனர். அது போன்றதொரு படம் தான் வரலாறு முக்கியம் என்ற படம் என்றார். மேலும், இப்படத்தின் இயக்குனர் மிகுந்த காமெடி உணர்வு உள்ளவர் இவர் இயக்கியுள்ள இந்த படத்திலும் அவரின் நகைச்சுவை சாயல் இருக்கும் ரசிகர்கள் தவறாமல் தியேட்டரில் வந்து படத்தை பார்த்து மகிழ வேண்டும் எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள்: பாபா ரீரிலிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது 

அவரைத் தொடர்ந்து நடிகர் டிஎஸ்கே பேசுகையில், “சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இந்த இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார் என்று கூறினார்.

தொடர்ந்து ஷாரா பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ், இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை. SMS போன்று இதுவும் ஒரு ஜாலியான படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்று கூறினார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here