வரலஷ்மி விரத முறைகள் மற்றும் பலன்கள்

0
10

வரலஷ்மி விரதம் என்பது அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளி தரக்கூடியது. அதுமட்டும் அல்லாமல் பெண்களின் திருமாங்கல்யத்தை காப்பதாகவும் நம் இந்து பெண்களால் காலகாலமாக நம்பப்பட்டு வரும் நம்பிக்கைக்குரிய வழிபாடாகவும் கருதப்படுகிறது.

ஓவ்வொரு ஆண்டிலும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை தினமன்று கடைப்பிடிக்கப்படும் விரதமாகும். இந்த அருமையான நன்நாளில் வரலஷ்மி தேவிக்கு விரதம் இருந்து பூஜை செய்து சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் செல்வத்தோடும் இருக்க தாலி பாக்கியம் நிலைக்கவும் இல்லத்தில் செல்வம் வளம் செழிக்கவும் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.

வரலஷ்மி விரத முறைகள் மற்றும் பலன்கள்

நோன்பு இருக்கும் முறைகள்:

  • இந்த நோன்பு கடைபிடிக்க முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி மனமணக்கும் சாம்பிராணியை இல்லம் முழவதும் பரவ செய்ய வேண்டும்.
  • வீட்டின் ஈசானிய மூளையில் மண்டபம் ஒன்றை தயார் செய்து அதில் ஒரு கலசத்தில் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசுகள் போன்றவற்றை இட்டு கலசத்தின் மேல் தேங்காய் வைக்க வேண்டும்.
  • பின்னர் தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகத்தினால் ஆன லட்சுமி உருவச் சிலையை அந்த தேங்காயில் கட்ட வேண்டும்.
  • மஞ்சள் சிரட்டில் குங்குமம் வைத்து கலசத்தில் அணிவித்து வரலட்சுமி முகம் கிழக்குப் பக்கமாக இருக்குமபடி வைத்து வணங்க வேண்டும்.
  • தீபா ஆராதனை செய்தவதற்கு இனிப்பான பலகாரங்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சிரட்டை விரதம் இருந்தவர்கள் கையில் கட்டுவர்.
  • படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம் மஞ்சள் புடவை மற்றும் பிரசாதங்கள் போன்றவற்றை சுமங்கலிக்கு தானமாக கொடுத்து ஆசிர்வாதம் பெறுவர்.
  • காலை முதல் பூஜை முடியும் வரை உண்ணா நோன்பு இருந்து விரதத்தை நிறைவேற்றுவர்.
  • ஐஸ்வர்யத்தை அள்ளி தரும் 108 மகாலஷமியின் மந்திரத்தை ஓதி மகிழ்வர்.

இதையும் படிக்கவும்: வரலஷ்மி விரதமும் 108 மகாலஷ்மி மந்திரமும்

வரலஷ்மி நோன்பிற்கு தேவையான பொருட்கள்:

  • வரலஷ்மி தாயை அமர்நத நிலையில் செய்வதற்கு மணப் பலகை ஓன்று.
  • பித்தலை அல்லது சில்வரால் ஆன சிறய குடம் ஓன்று.
  • அம்மன் முகத்தை உருவாக்க ஓரு தேங்காய்.
  • அம்மன் முகமானது மஞ்சளில் செய்ய வேண்டும் அதற்கு தேவையான மஞ்சள் பொடி.
  • குடத்தில் மாவிலை ஓரு கொத்து மற்றும் வீட்டிற்கு மாவிலைத் தோரணம் கட்டுவதற்கு தேவையான அளவு மாவிலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • குடத்தில் அம்மனுக்கு புடவை கட்ட ஓரு புதிய புடவை.
  • ஓரு சொம்பில் சுத்தமான தண்ணீர் ஊற்றவும் அதில் பச்சைக் கற்பூரம், ஓரு எலுமிச்சை பழம், தங்க காயின், வெள்ளி காயின் எதாவது ஓன்று அவர‍வர் விருப்பத்திறக்கு தகுந்தார் போல ஓரு காயின் அதில் போடலாம்.
  • இயலாதவர்கள் அதற்கு பதிலாக ஓரு 5 ரூபாய் நாணயத்தைக் கூட போடலாம்.
  • மஞ்சள், குங்குமம், தீப எண்ணெய், கற்பூரம், ஊதுபத்தி, உதிரிப் பூக்கள் மற்றும் பூ மாலைகள்
  • கழுத்தில் மற்றும் கைகளில் கட்டுவதற்கு மஞ்சள் கயிறுகள்.

மஞ்சளில் அம்மன் முகத்தை வடிவமைக்கும் வழிமுறைகள்:

குடத்திற்கு புதிய புடவையை அழகான முறையில் கொங்கு மடிப்பு போல மடித்து அழகாக புடவையை கட்டுதல் வேண்டும். அதற்குமேல் தண்ணீர், பச்சைக் கற்பூரம், எலுமிச்சை பழம், காயின் போட்ட சொம்பினை வைக்கவும். முதலில் இரண்டு தீபங்களை எண்ணெய் விட்டு ஏற்றவும். பூஜை முடியும் வரை தீபங்கள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். ஓரு சிறிய அளவில் மஞ்சள் எடுத்து அதில் முதலாவதாக சிறிய பிள்ளையார் பிடித்து வைக்கவும்.

அதன் பின் கொஞ்சம் பெரிய அளவில் மஞ்சள் பொடி எடுத்து அதை அழகாக தேங்காய அளவில் அப்பிவிட்டு அதில் அழகாக முகத்தை கையால் வடிவமைக்கவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து மஞ்சளை குழைத்து கண், புருவம், வாய், மூக்கு, காது என அனைத்தையும் வடிவமைக்கவும், கண்கள் வரைய கண் மையை பயன்படுத்தலாம். வெள்ளை கருவிழிக்கு சுண்ணாம்பு பயன்படுத்தலாம். பின் கண் மையால் கருவிழி, கண் இமை, புருவம் என அனைத்தையும் அழகாக வடிவமைக்கலாம்.

உதட்டிற்கு சிகப்பு நிற சாந்து பயன்படுத்தி புண்முருவலாக சிரிப்பது போன்று வரையாலாம். நெற்றியில் குங்குமம் வைத்து அழாகான வரலஷ்மி அம்மனை நாமே அமைக்கலாம். ஓரு மணபலகையில் அந்த குடத்தை வைத்து தேங்காயில் செய்த அம்மனை அந்த குடத்திற்கு மேல் உள்ள சொம்பில் மாவிலைகளை சொறுகி அதன் மீது தேங்காயை வைக்கவும். பின் பூமாலைகளை கழுத்தில் இட வேண்டும். மேலும் அழுகு செய்ய வேண்டுமானால் செய்யலாம்.

வரலஷ்மி நோன்பு உருவான வரலாறு:

புராணத்தின் படி ஒரு முறை பார்வதி தேவி சிவபெருமானிடம் பெண்களுக்கு நன்மை பயக்கும் ஒரு விரதத்தைப் பற்றி கேட்டுள்ளார். சிவபெருமான் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வரலட்சுமி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் சாருமதியின் கதையை கூறியுள்ளார்.

சாருமதியின் கணவர் மற்றும் குடும்பத்தினரின் பக்தியில் மகிழ்ந்த லட்சுமிதேவி அவரது கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தை செய்யும்படி கூறினாராம். விரதத்தில் நடைமுறைகளை அவளுக்கு விளக்கினார். பக்தியுள்ள சாருமதி தனது அண்டை வீட்டாரையும் நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து லட்சுமி தேவியின் கட்டளைப்படி வரலட்சுமி பூஜையை நடத்தினார். பூஜை முடிந்ததும் பூஜையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் இருக்க லட்சுமி தேவி அருள் பாலித்தார் என்பது புராண வரலாறு.

வரலஷ்மி விரதத்துடன் தொடர்புடைய வேறு கதை:

மன்னர் பத்ர த்ரசிரவஸ் மற்றும் ராணி சூரச்சந்திரிவின் மகள் ஷியாமபாலா அண்டை நாட்டு இளவரசரை மணந்தார். ஒருமுறை ஷியாமபாலா தனது பெற்றோரின் அரண்மனையில் இருந்தபோது அவள் தாய் ராணி சுரசந்திரிக ஒரு வயதான பெண்ணின் ஓட்டில் தங்கத்தை கண்டு விசாரிக்க அந்த வயதான பெண்மணி வரலட்சுமி பூஜை செய்ய சொன்னாள். ஆனால் ராணியோ ஒரு பிச்சைக்காரி பூஜைகள் பற்றிய அறிவுரை கூறுவதை விரும்பவில்லை.

அதனால் அவளை வெளியேற்றினால் கருணை உள்ளம் கொண்ட ஷியாமபாலா மூதாட்டி எழுந்து வரலட்சுமி விரதத்தின் மகத்துவத்தை கேட்டால். அவள் தன் நாட்டிற்கு திரும்பியதும் அந்த மூதாட்டியின் கட்டளைப்படி விரதத்தை செய்தால் விரைவில் அவளது ராஜ்ஜியம் செழிக்க தொடங்கியது. மற்றும் இளவரசர் அவரது நல்லாட்சிக்காக பாராட்டப்பட்டார். ஆனால் ஷியாமபாலாவின் பெற்றோர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டது.

ராஜாவும் ராணியும் தனது செல்வத்தை இழந்தனர், மக்கள் அவர்களது ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்ய தொடங்கினர்.  அவர்களின் துன்பத்தை பற்றி கேள்விப்பட்ட ஷியாமபாலா தங்கப்பானைகளை அனுப்பினால் ஆனால் ராணி சூரசந்திரிகா அவைகள் மீது தன் கண்களை வைத்த கணத்தில் அவை சாம்பல் ஆகின.

இதெல்லாம் அம்மா கிழவியை அரண்மனையில் இருந்து விரட்டியதன் விளைவு என்பது உணர்ந்தால். கிழவி மாறுவேடத்தில் இருக்கும் லட்சுமிதேவி என்பதை உணர்ந்த ஷியாம பாலா தனது தாயிடம் லட்சுமி தேவியின் மன்னிப்பு கேட்டு வரலட்சுமி விரதத்தை செய்யும் படி கேட்டுக்கொண்டால். அவள் அப்படி செய்து முற்பிறவியை அடைய முடிந்தது.

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி எடுக்கப்படும் நோன்பு இதனை அனைவரும் பின்பற்றி வாழ்வில் சகல இன்பங்களையும் பெற வேண்டும்.

என்ன என்ன பிரசாதங்கள் வைக்கலாம்:

பெரிய அளவிலான ஓரு தலை வாழை இலையை சுத்தமாக கழுவி அம்மன் முன் வைக்க வேண்டும். பின் நாம் செய்த பிரசாத வகைகளை வைத்து படைக்கலாம். அதாவது, மாவிலக்கு மாவு, தேங்காய் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம், முக்கனிகளான மா, பலா, வாழை, சப்போட்டா, சீத்தாப் பழம், கொய்யா பழம், திராட்சை, மாதுலம் பழம், ஆப்பிள், சாத்துக்குடி என அனைத்து வகையான பழங்களையும் வைத்து படைக்கலாம்.

நம்மால் என்ன வைத்து பூஜை செய்ய முடியுமோ அதை வைத்து பிரசாதம் செய்து படைக்கலாம்.

சுமங்கலிக்கு தாம்பூலம் வழங்குதல்:

இவ்விழாவின் முக்கிய நோக்கமே தாலிக் கட்டிய கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான நோன்பு ஆதலால், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ள சுமங்கலி பெண்களை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் மற்றும் பிரசாதங்கள் கொடுத்து ஆசி பெறலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலிக்கு பூஜையில் வைத்து படைக்கப்பட்ட மஞ்சள் கயிறு, வளையல், ஜாக்கெட் பிட், வெற்றிலைப் பாக்கு, பூ, ஓரு வாழைப் பழம் என தாம்பூலமாக கொடுத்து அன்பையும் அம்மனின் அருளையும் பெறலாம்.

வரலஷ்மி விரதமிருத்தலின் நன்மைகள்:

  1. கண்கட தெய்வமாக விளங்கும் கணவனின் ஆயுள் அதிகரி்க்கவும்.
  2. நோயிநொடியின்றி ஆரோக்கியமான உடலை பெறவும் சுமங்கலியாக நெடுங்காலம் வாழவும்.
  3. உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்பை பெறவும்.
  4. குடும்பத்தில் அன்பு, தைரியம், பண்பு, பாசம், வீரம், செல்வம் அனைத்தும் பெருகவும்.
  5. குடும்பத்தில் உள்ளவர்களின் மனதை புரிந்து கொள்ளவும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறவும்.
  6. இல்லத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆனந்தமாக இருக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here