விஜய்யின் சினிமா கேரியரின் முக்கியமான நாளில் ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்

0
7

வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படமானது பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து படத்திற்கான புரமோஷன் வேலைகளை படக்குழு தற்போதிலிருந்தே தொடங்கியுள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் வெளியாகி 77 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானஸி இந்த பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

varisu second single to be out on dec 4

இந்நிலையில் வருகிற 4ம் தேதி மாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ’ பாடலை வெளியிட இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் #TheeThalapathy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இந்த படமானது 1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதியன்று தான் வெளியானது. விஜய் கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னி்ட்டு இந்த பாடல் வருகின்ற டிசம்பர் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளதால்,  அவரது ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here