வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை விற்க மடிவு செய்து அறிவிப்பு பலகையினை ஓட்டியுள்ளது. ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4 ம் தேதி மாலை 6.00 க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். மேலும், இதற்காக அங்குள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் நடத்தினர். அதன் ஒரு பகுதியாகக் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி போராட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது.

அப்போது பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் மாநில மக்களிடையே பெரும் துயரமாக பார்க்கப்பட்டது.
ஸ்டர்லைட் ஆலைக்கு அரசு கொடுத்த இடம் மொத்தம் 107 ஏக்கர் நிலம் ஆனால், ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரினை சேமிக்கும் இடமே 147 ஏக்கர் அதிக அளவு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனமாக இருந்து வந்துள்ளது.
ஸ்டெர்லைட் போன்ற சிவப்பு நிற தொழிற்சாலை மக்கள் குடியிருக்கும் பகுதியில் செயல்படவே கூடாது. ஆனால், செயல்படுகிறது. இதனால் நிலம், நீர், காற்று மாசுக்குள்ளாகிறது. மாசடைந்த நீரை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் கருச்சிதைவுக்கு உள்ளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டே மக்கள் ஓன்று திரண்டு பெரும் போரட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டங்களில் பல இன்னல்களை சந்தித்து இறுதியில் ஆலையை மூடி போராட்டத்தில் வெற்றியும் கண்டனர்.
ஆலையைத் திறக்க வேந்தாந்தா நிறுவனம் பல முறை நீதிமன்றத்தை நாடியது ஆனால் அதற்கு நீதி அரசர்கள் மனுவை தள்ளுபடி செய்து வந்ததால் இனி ஆலையை திறக்க முடியாது என வேதாந்தா நிறுவனம் அவ்வாலையை விற்க முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது.
ஆலையை வாங்க விரும்புபவர்கள் ஜூலை 4 மாலை 6.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.