நானே வருவேன் படத்தின் வீரா சூரா என்ற பாடலின் லிரிக் வீடியோ

0
20

நானே வருவேன் படத்தின் வீரா சூரா என்ற பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 4.20 மணிக்கு வெளியிட போவதாக படக்குழு அறிவிப்பு.

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் முன்னனி நட்சத்திரமாக வலம் வருபவர். பல படங்களில் விருதும் வாங்கியுள்ளவராக உள்ளார். THE GREAY MAN என்ற ஆங்கில ஹாலிவுட் படத்திலும் நடித்து ஓட்டு மொத்த இந்திய திரை உலகையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.

முன்னதாக ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி கிரே மேன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகி அவரது கேரக்டரும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் கடந்த 18ந் தேதி ரீலிஸ் ஆகி நல்ல வசூல் வேட்டையில் இறங்கி உள்ளது. ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷுடன் இணைந்து நடித்த நித்யா மேனன் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ள நிலையில் படத்தின் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட கேரக்டர்களும் அவரவர் பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளனர்.

இந்நிலையில், தன் அண்ணன் செல்வராகவன் இயக்கிய படம் நானே வருவேன் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி பிரபலமான நிலையில் இன்று மாலை 4.20 மணிக்கு வீரா சூரா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாவதாக தயாரிப்பு நிறுவனமான கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

நானே வருவேன் படத்தின் வீரா சூரா என்ற பாடலின் லிரிக் வீடியோ

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்தில் தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இப்படம் செப் 30ல் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here