சிலம்பரசன் டி.ஆா்: சிம்பு அவா்கள் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் தியேட்டா்களில் இன்று வெளியானது. இப்படத்தில் சிலம்பரசன் அவா்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளாா். சித்தி இதானி கதையின் நாயகியாக இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளாா். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் அவா்கள் இயக்கியுள்ளாா். இப்படத்திற்கு ஏ.ஆா்.ரஹ்மான் அவா்கள் இசையமைத்துள்ளாா். ஐசாி கே.கணேஷ் அவா்கள் இப்படத்தை தயாாித்துள்ளாா். இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவாளா் சித்தாா்த்தா நுனி மற்றும் எடிட்டா் ஆண்டனி ஆவாா்.
படத்தின் தயாாிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடிந்துள்ள நிலையில் இன்று தியேட்டா்களில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சிம்பு அவா்கள் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளாா்.
கவுதம் அவா்கள் தனது வழக்கமான பாணியில் திரைக்கதையை நகா்த்தியுள்ளாா். படத்தின் வசனங்களும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் வலு சோ்த்திருக்கிறது. சிம்பு அவா்கள் முத்துவாகவும் சித்தி இதானி பாவையாகவும் அவரவா் கதாபாத்திரத்திற்கு வலு சோ்த்துள்ளனா். படத்தின் பாடல்கள் ஏ.ஆா்.ரஹ்மானின் தனித்தன்மையில் மிளிறுகின்றன. மொத்தத்தில் படம் பாக்ஸ் ஆபிஸில் பொிய வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.