தமிழ் விடுகதைகள் : ஓரு வினாவின் மூலம் நம் சிந்தனையை தூண்டி அறிவை ஆழப்படுத்துவது இதனை புதிர் என்றும் கூறுவர். முன்னோர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்தவை கிராமப்புறங்களில் முன்னோர்கள் இதனை பேச்சு போக்கில் பயன்படுத்துவர்.
விடுகதைகள் வாயிலாக கேட்டகப்படும் கேள்விகளில் மறைபொருகளின் வழியே பொருள் விளங்கச் செய்வதாக அமைந்திருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் விடுகதைகள் இருக்கும். விடுகதைகளுக்கு விடை தெரிய வேண்டும் என்று மனம் ஆவல் கொள்ளும். இப்படி அனைவரும் விரும்பும் விடுகதைகளை இத்தொகுப்பில் அறியலாம்.

விடுகதைகள் தமிழில்:
- நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
விடை : பென்சில்
- எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
விடை : மின் விசிறி
- வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?
விடை : உழுந்து
- முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்?
விடை : நாக்கு
- கூரை வீட்டைப் பிரிச்சா ஓட்டுவீடு! ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை!வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம்!அது என்ன ?
விடை : தேங்காய்
- பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?
விடை : வானொலி பெட்டி
- கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
விடை : சோளப்பொத்தி
- வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
விடை : பாம்பு
- உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடை : அஞ்சல் பெட்டி.
தெரிந்து கொள்க : பழமொழிகள் விளக்கம்
- இது ஒரு பூ. முதற்பகுதி ஆதவனின் மறுபெயர்; பிற்பகுதி தேசத் தந்தையை குறிக்கும். அது என்ன?
விடை : சூரிய காந்தி
- சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
விடை : பூனை
- தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
விடை : முதுகு
- இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரம் அல்ல. அது என்ன?
விடை : மின்மினிப் பூச்சி
- பற்கள் இருக்கும் ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
விடை : சீப்பு
- சங்கீத பாட்டுக்காரன் மழையில் கச்சேரியே செய்வான் அவன் யார்?
விடை : தவளை
- காற்றை குடித்து, காற்றில் பறப்பான் அவன் யார்?
விடை : பலூன்
- எட்டு கால் ஊன்றி இருகால் பட வட்ட குடை பிடித்து வருவான் அவன் யார்?
விடை : நண்டு
- வயதான ஒருவருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
விடை : பொக்கை
- வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது அது என்ன?
விடை : நாய்
- வீட்டிலிரு்ப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி அவர்கள் யார்?
விடை : பூட்டும், சாவியும்
- உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?
விடை : பாய்
- கழற்றிய சட்டையை மறுபடியும் போட மாட்டான் அவன் யார்?
விடை : பாம்பு
- முள்ளுக்குள்ளே முத்துகுவலயம் அது என்ன?
விடை : பலாப்பழம்
- எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விடை : விக்கல்
- குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.
விடை : கரன்டி
- அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
விடை : வெங்காயம்
- பாலிலே புழு நெளியுது. அது என்ன?
விடை : பாயாசம்
- வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
விடை : ஆறு
- மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
விடை : பஞ்சு
- ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை அது என்ன ?
விடை : தென்னை
- சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
விடை : கொசு
- மழையில் பிறந்து வெயிலில் காயுது?
விடை : காளான்
- அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்?
விடை : பந்து
இது போன்ற கல்வி, ஜோதிடம், ஆன்மீகம், செய்திகள் என மேலும் பலவகையான தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.