இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து அஜித் பட பதிவுகளை நீக்கினார்

0
9

விக்னேஷ் சிவன்: அஜித் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். நயன்தாரா சிபாரிசு காரணமாக அவருக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்தது என கூற்பபடுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை படக்குழுவினருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. மேலும் ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களின் தோல்வி காரணமாக விக்னேஷ் சிவனை நம்பி இவ்வளவு பெரிய படம் தருவதும் சரியல்ல என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இந்த படத்தை ஆக்ஷ்ன் திரில்லராக உருவாக்க வேண்டும் என அஜித் விரும்புகிறாராம்.

vignesh shivan removed ak62 pictures in his twitter page

விக்னேஷ் சிவன் அதுபோன்ற படங்களை உருவாக்கியது கிடையாது. அதனால் அவரை நீக்கிவிட்டு வேறாெரு இயக்குனருடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஏகே 62’ என பல்வேறு பதிவுகளை அஜித் படம் தொடர்பாக விக்னேஷ் சிவன் போட்டிருந்தார். அந்த பதிவுகளையெல்லாம் தற்போது விக்னேஷ் சிவன் நீக்கியிருக்கிறார். இதனால் அஜித் படத்திலிருந்து அவரை நீக்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here