பிரதீப் ரங்கநாதன்: அஜித்தின் ‘துணிவு’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் படத்தை லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கிறது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் அவரின் கதை லைகா நிறுவனம் மற்றும் அஜித்திற்கு பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அஜித் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டதால் அடுத்த படத்தை உடனே தொடங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் பல ஹீரோக்களை பார்த்து கால்ஷீட் கேட்டு வருகிறார். அஜித் வேண்டாம் என்று சொன்ன கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னார் அவர். நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என விஜய் சேதுபதி சொல்லிவிட்டாராம். ஆனால் அவரது கால்ஷீட் இப்போதைக்கு கிடைக்காது என்றும் இந்த ஆண்டு முழுவதும் அவர் பிசியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதனால் காதல் கதை கொண்ட ஒரு படத்தை இயக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளார். இதற்காக பிரதீப் ரங்கநாதனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். லவ் டுடே படத்துக்கு பிறகு அடுத்த படத்தை கவனமாக தேர்வு செய்ய விரும்புகிறார் பிரதீப் ரங்கநாதன். இதனால் உடனே அவர் கால்ஷீட் தர சம்மதிக்கவில்லையாம். முழு ஸ்கிரிப்ட் கொடுத்தால் படித்துவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளாராம். அதனால் அவரிடம் ஸ்கிரிப்ட் தருவதற்காக அதை எழுதும் பணியில் தற்போது விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார்.