மை டியர் பொண்டாட்டி, தங்கமே என நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷசிவன்

0
11

மை டியர் பொண்டாட்டி, தங்கமே எப்போதும் என் உயிர், உலகமே ஐ லவ் யூ என காதல் பொங்க பிறந்தநாள் வாழ்த்தை நயன்தாராவிற்கு தெரிவித்துள்ளார்  விக்னேஷசிவன்.

தென்னிந்திய உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக சினிமா துறையில் பல சாதனைகளை படைத்து வரும் நயன்தாரா. அவரின் 38 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பல சர்ச்சைகளை கடந்து இன்று மிகப் பெரும் நடிகையாக திரையுலகில் நிலைத்து வந்துள்ளார்.

இவரது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் திரைத் துறை நடிகர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவன் ரொமாண்டிக் படங்கள் சிலவற்றை பகிர்ந்து நயன்தாராவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

மை டியர் பொண்டாட்டி, தங்கமே என நயன்தாராவை வாழ்த்திய விக்னேஷசிவன்

அதில் அவர் உன்னுடன் நான் கொண்டாடும் பிறந்தநாள் கொண்டாட்டம் 9 வது முறை எனவும் கூறியுள்ளார். உன்னுடைய ஓவ்வொரு பிறந்தநாளும் சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் வித்தியாசமானதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், இந்த பிறந்தநாள் மிகவம் சிறப்புக்குரியது.ஏனெனில் நாம் இருவருக்கும் திருமணம் முடிந்து நாம் இரு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி விட்டோம்.

இனிவரும் ஓவ்வொரு பிறந்தநாளையும் நாமும் நம் குழந்தைகளுடன் நல்ல முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் எனவும், நான் உன்னை ஒரு சக்திவாய்ந்த பெண்ணாகவே அறிந்ததோடு, அதனை பார்த்தும் இருக்கிறேன். நீ எதைச் செய்தாலும், நம்பிக்கையுடனும், அர்ப்பனிப்புடனும் செய்கிறாய். இத்தனை வருடங்களில் நான் உன்னை ஒரு வித்தியாசமான நபராக பார்த்தேன். வாழ்க்கை மட்டுமல்ல எல்லாவற்றிலும் நீ காட்டும் நேர்மை, எப்போதும் என்னை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஓடிடி மற்றும் திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

இத்தனை வருடங்களில் உன்னைவிட அழகான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. உன் முகத்தில் இருக்கும் சிரிப்பும், ஆனந்தமும் எப்போதும் உன் இயல்பான ஒன்றாக இருக்க நான் பிரார்த்திக்கிறேன். தற்போது நான் செட்டில் ஆகிவிட்டது போல் உணர்கிறேன். வாழ்க்கை அழகாகவும் திருப்தியானதாகவும் இருக்கிறது.

மை டியர் பொண்டாட்டி, தங்கமே எப்போதும் என் உயிர், உலகமே லவ் யூ என காதல் பொங்க பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதனை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் விக்னேஷ்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here