நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய அப்டேட் விக்னேஷ்சிவன்

0
4

நயன்தாராவின் பிறந்தநாள் வருகிற 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் புதிய படத்தின் டீசரை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார் விக்னேஷ்சிவன் அது அவருக்கு சர்ப்ரைசாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா பல முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என அனைவருடனும் நடித்துள்ளார். இவர் இந்த வருடம் ஜூன் மாதத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மிக பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

தற்போது, வாடகைத்தாய் மூலம் இரு தாய்களுக்கு பெற்றோர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு அவரின் திரைப்படம் வெளியாக உள்ளது. அப்படத்தின் பெயர் கனெக்ட் அப்படத்தின் டீசரை அவரின் பிறந்தநாளான 18ம் தேதி வெளியிடுவதாக விக்னேஷ்சிவன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் போஸ்டர் ஓன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: தளபதி 67 பட வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த இயக்குனர்

நயன்தாராவின் பிறந்தநாளில் வெளியாகும் புதிய அப்டேட் விக்னேஷ்சிவன்

இப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது இந்த தயாரிப்பு நிறுவனம் விக்னேஷ்சிவனுடையது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். சத்யராஜ் மற்றும் பாலிவுட் திரைப்பட நடிகர் அனுபம் கேர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலிஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நயன்தாராவிற்கு இறுதியாக வெளியான படம் காட்பாதர் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் ரசிகர்களும் இவரின் நடிப்பை பாராட்டி வந்தனர்.

இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகி வரும் ஜாவான் படத்திலும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகனாக ஷாரூக்கான் நடித்து வருகின்றார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கும் படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளில் சிறப்பான சர்ப்ரைஸ் இருப்பதாக கூறி கனெக்ட் படத்தின் டீசர் வெளியாவதை ரசிகர்களுக்கு சமூகவலைதள பதிவு மூலம் தெரிவித்தார்.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here