விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து புகழ் பெற்றார். இவரது பாடல்கள் பெரும்பாலும் துள்ளல் இசையோடு இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும்.
அதன் பிறகு அவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பல படங்களில் நடித்து கதாநாயகனாகவும் வெற்றி பெற்றார். தற்போது அவர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியாவில் உள்ள லங்காவிக்கு சென்றிருந்தார். அங்கு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது சிம்மிசிப் போன்ற படப்பிடிப்பு சாதனங்களை ஒரு போட்டில் வைத்து விஜய் ஆண்டனி ஸ்ட்ரீமர் போட்டை தனியாக ஓட்டி வருவது போல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அப்போது அவர் 120 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் போட்டை ஓட்டி வரும்போது படப்பிடிப்பு குழுவினர் இருந்த போட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் போட் முற்றிலும் சேதமடைந்துள்ளது. அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார். அவர் நீரில் மூழ்கி சிறிது நேரம் கழித்து அவரது உடல் மேலே மிதந்துள்ளது. பின்னர் அவரைத் தூக்கியபோது அவரது முகம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் பற்கள் உடைந்து உடல் முழுவதும் பலத்த காயத்துடன் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார்.
பின்னர் அவரை லங்காவியில் உள்ள மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நாளை மேல் சிகிச்சைக்காக மலேசியாவிற்கு கொண்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ஓம், டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ஆகியோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.